நடிகர் சங்க தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமென்றும் , மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

தொடர்புடைய படம்

இந்த மனு மீதான விசாரணையை நாளை தேர்தல் நடைபெறுவதால் அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம்  விசாரித்தது.  இதில் தேர்தல் நடத்த நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அல்லது  மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளி ஆகிய இரண்டில் ஒரு இடத்தை நடிகர் விஷால் தரப்பு கோரியிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் , சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம். இதற்க்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.