என் ஜெர்சி நம்பர் “27”…… என் குழந்தை பிறந்த நாள் “27”…..இந்திய சுழற்பந்து வீச்சாளரின் ருசிகர ட்விட்…!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் பந்து வீச்சையும், மகளின் பிறந்த நாளையும்  இணைத்து ஹார்பஜன் ட்வீட் செய்துள்ளார்.  

ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை பொறுமையாக ஆடி 17.4 ஓவர்களில் 71/3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது.

Seithi Solai

இந்த போட்டியில் ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி  20 ரன்கள் விட்டுக்கொடுத்து  3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹர்பஜன்சிங் ஓவர், ரன்கள், விக்கெட் ஆகிய மூன்றையும்  கூட்டி மொத்தம்  “4-0-20-3″=27, என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் ஹர்பஜன் ஜெர்சி நம்பர் 27,  மகள்  ஹீனாயா பிறந்த நாள் 27-07-2017 இவையாவும் தற்செயலாக நடந்துள்ளதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே மும்பை அணியில் இருக்கும் போது அவர் ஜெர்சி நம்பர் 3 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை அணிக்கு வந்ததும் தன் மகள் பிறந்த 27வது நாளை ஜெர்சி நம்பராக மாற்றிக்கொண்டார்.

ஹர்பஜன் சிங் ட்விட்டரில்   ஜெர்சி நம்பர் “27” இன்றைய சென்னை ஐ.பி.எல்  ஸ்பெல் “4-0-20-3″=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் “27” இவையாவும் தற்செயல். ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று! என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.