“My Daddy கிடைத்துவிட்டார்”….. உங்கள் அனைவருக்கும் நன்றி…. மகிழ்ச்சியை ஷேர் செய்த கூல் சுரேஷ்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் “வெந்து தணிந்தது காடு” பட அறிவிப்பு வெளியானது முதல் படத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். இப்படத்திற்காக இவர் கொடுத்த புரமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. மேலும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோசியல் மீடியாவில் பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாக்கிங் சென்ற தனது தந்தையை காணவில்லை என்றும் அவரை எங்கேயாவது கண்டால் தகவல் அளிக்கும்படியாகவும் தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் இந்த பதிவு இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் மறுநாள் காலையில் தனது தந்தையை ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டார் என்றும் அதற்கு ஊடக நண்பர்களால் காரணம் என்றும் அனைவருக்கும் நன்றி என்று கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.