இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

சுபஸ்ரீ பலியானதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்து வருகின்றனர். உயர் நீதிமன்றமும் தமிழக அரசை சரமாரியாக கேள்வியெழுப்பியும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து திமுக, அதிமுக, பாமக கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், விளம்பரப்பதாகையால் பலியான இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல்: காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளம்பரப்பதாகையால் பலியான
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல்:
காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என வேண்டுகோள். pic.twitter.com/WHsOWOT9Zx— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 13, 2019