தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், அவரது நண்பர்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்த இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், ஆகஸ்ட் 2022 அண்ணாமலை கொடுத்த பேட்டி டிவியில் எல்லாம் வந்தது. IT இப்போது பிசியா இருக்குது. அவங்க எல்லாம் பிசி எல்லாம் முடிச்சிட்டு பிறகு செந்தில் பாலாஜி வீட்டுக்கு ரெய்டு வருவார்கள் என பகிரங்கமாகவே பிஜேபினுடைய தலைவராக தமிழ் மாநிலத்தில் இருக்கிற அண்ணாமலை சொன்னார்.
செந்தில் பாலாஜி குறிவைப்பதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 2021 தேர்தலில் கோவை மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் கணிசமான இடங்களை அதிமுக கூட்டணி பெற்றது. ஆனால் செந்தில் பாலாஜி அவர்கள் அந்த இரண்டு மாவட்டத்தினுடைய பொறுப்பை தலைமைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்…
நூற்றுக்கு நூறு கோவை மாவட்டத்திலும் – கரூர் மாவட்டத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுக்கொடுத்தார் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களிலேயே அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவருடைய பேச்சுகளிலே முன் உதாரணமாக காட்ட முடியும். ஆக இப்படிப்பட்ட காரியங்களை செய்வதற்கு தலைவர் ஊரில் இல்லாத நேரத்தில் தமிழ்நாட்டுக்குள்ளே செய்தது என்பது பிஜேபினுடைய மிகக் கேவலமான அரசியலை காட்டுகிறது என தெரிவித்தார்.