பிரதமர் மோடிக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து..!!

பிரதமர் மோடி எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  

பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image result for My best wishes to Narendra Modi rahul

அந்தவகையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், நரேந்திர மோடியின் 69 வது பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.