காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு இதுவே முதல் சுதந்திர தினம் என்பதால் சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 73 -ஆவது சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “உண்மை மற்றும் அகிம்சைக்கு நடைமுறையில் நமது அணுகுமுறையின் அளவிற்கு மட்டுமே முழுமையான சுதந்திரம் முழுமையடையும்.”
- மகாத்மா காந்தி
இந்த 73 வது சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
“Complete independence will be complete only to the extent of our approach in practice to truth and nonviolence.”
– Mahatma Gandhi
My best wishes to all of you on this our 73rd Independence Day ??#HappyIndependenceDay
— Rahul Gandhi (@RahulGandhi) August 15, 2019