முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்…. பாஜகவுக்கு சிம்ம சொப்பனம்…! கெத்தாக பேசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும்,  அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ…

அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் நீங்கள் மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்து,  நம்முடைய தலைவர் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பான ஆட்சியாக தந்து கொண்டிருக்கிறார். திரு மோடி அவர்கள் பேசும்போது சொன்னாங்க…  இங்க வரும்போது அவரு தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாறு. ஆனால் தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டு வந்து ஹிந்தியை தான் திணிப்பாரு.

திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு  நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு…

தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன செஞ்சு இருக்கீங்க ? ஒண்ணுமே செய்யல.  எனவே உங்கள் முகத்திரையை கிழித்து,  நீங்கள் ஒவ்வொரு  முறையும் மாநில உரிமை பறிக்கும் பொழுது,  அதற்கு குரல் கொடுத்து இந்தியாவிலேயே உங்களுக்கு சின்ன சொப்பனமாக திகழ்கின்ற ஒரே தலைவர் எங்களுடைய தலைவர் திரு. தளபதி அவர்கள்தான். எப்படி 2019 பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகமும் மோடி அவர்களை நிராகரித்ததோ,  அதேபோல் உங்களது கூட்டணி கட்சி அதிமுகவையும் மக்கள் நிராகரித்துள்ளார்.

Leave a Reply