தண்டவாளத்தை கடக்க முயன்ற…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடியாத்தத்தில் முதியவர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதனால் முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முதியவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *