“மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்”…. 5 வருஷத்தில் வட்டி மட்டும் 6 லட்சம்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டமானது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது. இது தவிர்த்து விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வுபெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இப்போது இந்த திட்டத்தில் 8% வட்டியானது கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இத்திட்டத்தின் வாயிலாக 5 வருடங்களில் ரூ.6 லட்சத்தை வட்டியிலிருந்து மட்டுமே சம்பாதிக்க முடியும். இந்த திட்டத்தில் தொகை 1000 மடங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

அதிகபட்சம் ரூபாய்.15,00,000 வரை இதில் முதலீடு செய்துக்கொள்ளலாம். கணக்கு துவங்கிய நாளில் இருந்து 5 வருடங்களுக்கு பின் வைப்புத்தொகை முதிர்ச்சியடைகிறது. காலாண்டு அடிப்படையில் வைப்புத்தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது. தற்போது டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 6 லட்சம் வட்டி எப்படி கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது?

இத்திட்டத்தில் ரூ.15 லட்சத்தினை முதலீடு செய்தால் 8% வட்டி கிடைக்கும். அத்தகைய நிலையில் SCSS கால்குலேட்டரின் படி 5 வருடங்களில் நீங்கள் ரூ.6,00,000 வட்டியாக 15 லட்சத்திற்கு மட்டும்  பெறுவீர்கள். இத்தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்காக வழக்கமான வருமானத்தை ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்.