பொறுத்துக்க முடியல….. நாங்களும் பொருட்டா மதிக்கிறது இல்ல…. உதயநிதியை சாடிய பாஜக தலைவர்….!!

கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில்  தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்துப் பணிகளும் இயல்பாக தொடங்கி சீராக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் தேர்தலுக்கான பணிகளும்  நடைபெற்று ஆங்காங்கே தேர்தலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் இறங்கிவிட்டன.

இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், ஒருபுறம் பாஜகவினர்  நடத்தும் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்று நிவர் புயலுக்கு முன் தேர்தல் களம் அனல் பறந்தது. இந்நிலையில் பாஜக  தலைவர் எல்.முருகன் திமுக தேர்தல் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  உதயநிதி பிரச்சாரத்தை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. வேல் யாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாமல்தான் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *