விடுமுறை நாளை ஒட்டி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளை ஒட்டி ஆந்திரா கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
அதில் பொது வழியில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று மூலவரை தரிசித்துள்ளனர். அதேபோல 100 மற்றும் 150 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.