கொடூர கொலை…பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தறுப்பு …போலீஸ் தீவிர விசாரணை …!!

பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரிஷ்வானா பானு. கணவரை பிரிந்த இவர் கடந்த 2ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார் .இந்தநிலையில் வீட்டின்  மேல்தளத்தில் உள்ள தனது அறையில் கழுத்தறுபட்ட நிலையில் ரிஷ்வானா பானு சடலம் கிடந்துள்ளது.

இதனால் தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை மாயமாகி உள்ள நிலையில் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.