முருங்கை கிளை உடைந்ததால் கொலை – போலீசில் சரண்

வீட்டில் உள்ள முருங்கையின் கிளை உடைந்ததால் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கலைவாணி தம்பதியினர். இவர்களது வீட்டின் அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன் வசித்து வந்துள்ளார்.

ராமனுக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே நிலப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ராமன் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் கிளை உடைந்துள்ளது. இதனால் ராமன் கலைவாணி இடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கோபம்கொண்ட ராமன் கத்தியால் கலைவாணியின் வயிற்றில் பலமாக குத்திவிட்டு  தப்பி சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் கலைவாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளதை அடுத்து வெள்ளிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கலைவாணியை கலைவாணியே குத்திவிட்டு தப்பி ஓடிய ராமன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *