“வடமாநில வாலிபர் கொலை வழக்கு” வசமாக சிக்கிய 8 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழச்சேரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களை அமர்த்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் 5 பேரை தாக்கியதில் பலத்த காயமடைந்த அப்துல் அசீஸ் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் வடமாநில வாலிபர் கொலை தொடர்பாக ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களை சேர்ந்த தினேஷ், பிரபு, ராஜா ஆகிய 3 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் கீழச்சேரி பகுதியை சேர்ந்த திவாகர், திமியோன், ரமேஷ், சூர்யா, முகேஷ், தீபக் ராஜா ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *