தந்தை-மகன் கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. நெல்லையில் பரபரப்பு….!!!

முன்விரோதத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மேட்டுக்குடி தெருவில் மீன் வியாபாரி அய்யாதுரை வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யாதுரை மர்மமான முறையில் குட்டையில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது மகன் சரவணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் சிவன், கண்ணன் ஆகியோருக்கும் சரவணன், அய்யாதுரை ஆகியோருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் முன்விரோதம் இருப்பது தெரியவந்தது. எனவே சிவன், கண்ணன் ஆகியோரின் வீட்டிற்கு சென்று தனது தந்தையை ஏன் கொலை செய்தீர்கள் என்று சரவணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன், சிவன் ஆகிய இருவரும் சரவணனை வீடு புகுந்து கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *