விவசாயி கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட நபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

முதியவர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் சொக்கம்பட்டியில் விவசாயியான கருத்தபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வரப்பு பிரச்சனை காரணமாக கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லையா என்பவரின் மகன் சந்தனபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *