“என்னையும் பார்ட்னராக சேர்த்துக்கோ” தாய் மாமாவின் வெறிச்செயல்…. தென்காசியில் பரபரப்பு…!!

வாலிபரை அவரது தாய் மாமா கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வைரமுத்து மற்றும் தங்கமுத்து என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது தந்தை நடத்தி வந்த கம்பங்கூழ் கடையை சகோதரர்கள் இருவரும் கவனித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மாரிமுத்துவின் சகோதரரான அன்பழகன் என்பவர் உதவியாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடையில் தன்னையும் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுமாறு அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வைரமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *