மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென தங்கமணியை வெட்ட முயற்சித்துள்ளனர்.

இதனைக் கண்டு தங்கமணி அலற வங்கி காவலாளி ஓடிவந்து தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வெட்ட முயன்ற தமிழ்ச்செல்வனை சுட்டார். இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர். மேலும் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டதைத் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வங்கிக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.