மாமியாரின் தகாத உறவை கண்டித்தவர்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மாமியாருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் தண்டபாணி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ராணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தண்டபாணி இராணியின் வீட்டிற்கு வருவது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பிடிக்காத காரணத்தால் தனது தாயை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து ராணியின் மகள்களில் ஒருவரான மலர்கொடி கணவர் துரையன் என்பவர் மலர்க்கொடியுடன் ராணி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.

அந்த சமயம் தண்டபாணி ராணியின் வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அவரது மகளும், மருமகனும் தண்டபாணியை கண்டித்து தகராறு செய்துள்ளனர். இதில் கோபம் அடைந்த தண்டபாணி அவரது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து துரையன் மற்றும் மலர்கொடி ஆகிய இருவரையும் சரமாரி குத்தி விட்டார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு துரையனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் மலர்கொடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வடக்கிபாளையம் போலீசார் தண்ட பாணியே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *