“மஞ்சப்பைகளை பயன்படுத்துங்க”…. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி ஆணையரின் அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு ரதவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார ஆய்வாளர்களும், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சரக்கு வாகன உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் இளவரசன் கூறியதாவது, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது, உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மஞ்சப்பைகளை உபயோகிக்க வேண்டும் என கூறியுள்ளார்.