மீண்டும் மும்பையிடம் வீழ்ந்த பெங்களூரு…!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். விராட் கோலி 8 ரன்களில் வெளியேற  பொறுப்புடன்  விளையாடிய பார்த்திவ் பட்டேல் 28 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து  டீவில்லியர்ஸும், மொயின் அலியும் ஜோடி சேர்ந்தனர். மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும்   (5 சிக்ஸர், 1 பவுண்டரி)  டிவில்லியர்ஸ்  51 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரி)  ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பெங்களூரு அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளும், பேகெஃரெண்டார்ப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து  171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிக்காக்கும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பிறகு மொயின் அலி பந்து வீச்சில்  ரோஹித் சர்மா 28 (19) ரன்களில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து குவிண்டன் டிக் காக்கும் 26 பந்துகளில் 40 ரன்கள் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்  அதிரடியாக விளையாடி 21 (9) ரன்களும், சூர்ய குமார் யாதவ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 11 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. கடைசியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 37* ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்கமல்  வெற்றி பெற வைத்தார். அவருடன் பொல்லார்டும் 0* ரன்னில் களத்தில் இருந்தார்.இறுதியில் 19 ஓவரில் 5 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  பெங்களூரு அணியில் சாஹல், மொயின் அலி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் 3வது இடத்திற்கு முனனேறியுள்ளது.