2வது வெற்றி யாருக்கு….? கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்  அணிகள் மோதுகின்றன 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 9-ஆவது லீக் போட்டியில்கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்  அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி   பஞ்சாப்பில் உள்ள மொகாலி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு  நடைபெறுகிறது. இரண்டு அணிகளும்  முதல் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் 2 வது வெற்றியை பதிவு செய்வதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 12 போட்டியில் மும்பையும், 10 போட்டியில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை அணி முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றது. 2வது போட்டியில்  பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா நோபால் வீச அதனை நடுவர் கவனிக்காததால் சர்ச்சை ரீதியாக  வெற்றி பெற்றது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, டி காக், ஹர்திக் பாண்டியா, யுவராஜ் சிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதிரடி வீரர் பொல்லார்டும்  சிறப்பாக செயல்பட்டால் அதிக ரன்களை குவிக்க முடியும்.பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, மெக்லானகன், மார்க்கண்டே ஆகியோர் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி  வருகின்றனர்.

பஞ்சாப் அணி முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை வென்றது. 2வது போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கிறிஸ் கெயில், சர்பராஸ் கான், கடந்த போட்டியில் அசத்திய டேவிட் மில்லர், மயங் அகர்வால் ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர்.பவுலிங்கில் ஆண்ட்ரு டை, முஜீப், முகமது சமி ஆகியோர் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் கடந்த போட்டியில் பஞ்சாப் பந்து வீச்சை கொல்கத்தா அணி பந்தாடியது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். இரண்டு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.