இன்று நடைபெறும் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன
12வது ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 11 முறை வென்றுள்ளது. மும்பை அணி 13 முறை வென்றுள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் கேப்டன் தோனி தனி ஒருவனாக நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.சென்னை அணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பலமான அணியாக திகழ்கிறது.
முன்னாள் சாம்பியனான மும்பை அணியில் வலுவான வீரர்கள் இருந்தும் சொதப்பி வருகின்றனர். ரோஹித் சர்மா, டிகாக், பாண்டியா, பும்ரா தவிர மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்து வருகின்றனர். மிடில் வரிசையில் அதிரடி காட்டினால் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். இன்றைய ஆட்டத்திற்க்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை மற்றும் மும்பை போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.