குவிண்டன் டிகாக் அரைசதம்….. ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு..!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிகாக்கும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்ற நிலையில் ரோஹித் சர்மா 47 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். குவிண்டன் டிகாக்  அரைசதம் கடந்தார்.இதையடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 16, பொல்லர்ட் 6 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தொடக்க வீரர்  குவிண்டன் டிகாக்  81 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் இஷான் கிஷன் 5 ரன்னில் வெளியேற இறுதியில் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா 28* (11) ரன்களும், கருணால் பாண்டியா 0* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில்  ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், ரஹானேவும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்..