இன்றைய ஐபிஎல் போட்டி : மும்பை vs ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை அணி இத்தொடரில் 6 போட்டிகள் விளையாடி  4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று  புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த போட்டியில் கேப்டன் பொல்லார்ட் அதிரடியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  மும்பை அணி 198 ரன்களை சேசிங் செய்தது. பொல்லார்ட் 83 ரன்கள் (10 சிக்ஸர்)  விளாசினார். காயம் காரணமாக கடந்த போட்டியில் விலகியிருந்த கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் களமிறங்குவார் என மும்பை அணியில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரர்கள் இருந்தும் இதுவரையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்ததால் அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வியும் , 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தை பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு ராஜஸ்தான் அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது அதில் மும்பை 12 வெற்றியும் , ராஜஸ்தான் 8 வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.