மூழ்கியிருந்த காரில் எலும்புக்கூடு…. 17 வருடத்திற்கு பிறகு…. பிரபல நாட்டில் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்…!!!

 நீருக்குள் மூழ்கியிருந்த காரில் காணாமல் போன இளைஞரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயர்லாந்தில் Barry Coughlan என்ற இளைஞர் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 1 தேதி காணாமல் போயுள்ளார். இது குறித்து  அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக  நடத்திய  விசாரணையில்  எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் போலீசார் தடுமாறினார். இந்நிலையில் கடந்த மே 26 ஆம் தேதி தன்னார்வலர்கள் சிலர் இந்த இளைஞரை தேடிவந்த நிலையில்  கிராஸ்ஹேவன் என்ற இடத்தில் இந்த இளைஞர் பயன்படுத்திய காரை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது .அப்போது நீருக்குள் மூழ்கி இருந்த  காரில் இருந்து எலும்புக்கூடு  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்த போது  அது காணாமல் போன Barry Coughlan என்பவருடையது தான் என்று போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  மாயமான இளைஞரின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கை  நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *