இணையதளத்தில் முகக்கவசம் விற்பனை…. வியாபாரியிடம் பண மோசடி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முகக்கவசம் விற்பனை செய்தவதாக கூறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரத்து 500 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் மணி முகக்கவசம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி பார்த்தார். அதில் மணி ஒரு தனியார் நிறுவனத்தின் செல்போன் எண்ணுக்கு முகக்கவசம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார். இதில் மறுமுனையில் பேசிய நபர், மணியிடம் ரூ.52 ஆயிரத்து 500-க்கு 5 ஆயிரம் மதிப்பிலான முகக்கவசத்தை தருவதாக கூறினார். இதனை நம்பிய மணி அந்த நபரின் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்தினார்.

இதனையடுத்து அந்த நபர் முகக்கவசம் அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார். அதன்பின்னர் தான் மணி மர்ம நபரால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து மணி சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மர்ம நபரின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மணியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *