வேற இடமே கிடைக்கலையா…? திடீரென வந்த ரயில்… நடைப்பயிற்சியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சார ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம். இவர் இன்று அதிகாலையில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கத்தின் மீது மோதியது.

இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுப்புராயலு ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *