இனி NO TRAFFIC….. 7 இடங்களில்….. ரூ45,00,00,000 செலவில்….. நகரும் நடைபாதை….!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏழு முக்கிய இடங்களில் ரூபாய் 45 கோடி செலவில் நகரும் நடைபாதை அமைக்க உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். பொதுவாக சென்னை மக்கள் சாலையை நடைமேடை வழியாக கடைக்க மாட்டார்கள்.

அதற்கு காரணம் படி வழியாக ஏறிச் செல்லவேண்டும் என்ற சோம்பேறித்தனம் தான். இதற்கு மாற்றாக தடுப்புச் சுவரின் இடையே ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் சாலையை கடந்து செல்வர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதனைக் குறைப்பதற்காக முக்கியமான ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் சுமார் ரூபாய் 45 கோடி செலவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் அவ்விடங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.