நாளை தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து…!!

நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

Image result for 100% வாக்குப்பதிவு

இந்நிலையில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க எதுவாக நாளை அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் வெளியிட்டுள்ளது.