மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் ரவி உணவு வாங்குவதற்காக சிங்கனூரில் இருந்து கணபதிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ரவி கள்ளிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ரவி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ரவியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ரவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *