மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்….! நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியானது …!!

பாப்அப் செல்பி கேமரா, 5000 mah பேட்டரி உள்ளிட்ட அட்டகாசமான பல வசதிகளுடன் ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் வெளியீடுகளைத் தள்ளி வைத்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அதன்படி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ ஸ்மர்ட்போன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் சிறப்புகள்

  • 6.5 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
  • பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா+ 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • நீலம் மற்றும் வெள்ளை நிற ஸ்மார்ட்போன்கள்

விலை

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 16,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ வரும் ஜூன் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *