புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்து காவல்துறையினர் இலவச ஹெல்மெட் வழங்குகின்றனர்.
இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச ஹெல்மெட் வழங்கப்படுகிறது. அத்துடன் சாலைவிதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக போலீசார் ஒரு கார்டு கொடுக்கின்றனர். ஒடிசா போலீசாரின் இந்த முயற்சி பாராட்டும் விதமாக உள்ளது.