மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தென்காசியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சந்தப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *