“தலைவரானதாக எந்த தகவலும் வரவில்லை” மோதிலால் வோரா தகவல் …!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமித்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று மோதிலால் வோரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பெறுபேற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தான் காங்கிரஸ்  தலைவர் கிடையாது புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மூத்த மோதிலால் வோரா செயல்படுவார் என தகவல் வெளியாகியது.

இது குறித்து பேசிய மோதிலால் வோரா , இடைக்கால தலைவராக தன்னை நியமித்துள்ளதாக தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியவரவில்லை.ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று நாங்கள் மீண்டும் ஒருமுறை ராகுலிடம் வலியுறுத்துவோம் . காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் போது எங்களுடைய கருத்துக்களை  முன்வைப்பேன் என்று மோதிலால் வோரா தெரிவித்தார்.