கரூர் மாவட்டம் அருகே தாயின் கள்ளக்காதலன் மனநலம் பாத்திக்கப்பட்ட 13 வயது சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் வயது (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது சங்கர் கணேஷ்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது மகளுடன் வசித்து வரும் 40 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சங்கர் கணேசின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதானல் சங்கர் கணேஷ் வேலைக்கு சென்ற பிறகு அவரின் செயல்பாடு பற்றி தனது மகளிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி தன்னை சங்கர் கணேஷ் பலமுறை கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் அவருடன் வேலை பார்த்த 2 பேர் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சங்கர் கணேஷ் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் வெள்ள கோவில் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் (50) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு முருகேசன் (47) ஆகியோரும் கற்பழித்தது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் சங்கர் கணேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற முருகேசன் மற்றும் மற்றொறு முருகேசனை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.