“எனக்கும் பணம் வேண்டும்” தாயை கொன்ற மகன்…. விருதுநகரில் பரபரப்பு….!!!

பணம் தராததால் மகன் தாயை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் களஞ்சியம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதிகாலை 3 மணிவரை அவரது இளைய மகன் ஹரிஹரன் டிவி பார்த்துள்ளார். இதனால் களஞ்சியம் டிவியை அணைத்துவிட்டு தூங்குமாறும் கூறியுள்ளார். அப்போது ஹரிஹரன் அண்ணனுக்கு மட்டும் இடத்தை விற்று பணம் கொடுத்து இருக்கிறாய் எனக்கும் பணம் வேண்டும் என்று களஞ்சியத்திடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஹரிஹரன் தன் தாய் களஞ்சியத்தை கம்பியை எடுத்து கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே களஞ்சியம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே களஞ்சியம் வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த களஞ்சியத்தின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *