சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அடிக்கடி பணம் கேட்டதால் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக எண்ணி சிவலிங்கம் ஆத்திரமடைந்து அரிவாளால் முனீஸ்வரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலையாளி சிவராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின் கொலை செய்யப்பட்ட முனீஸ்வரனின் உடல் பிரேதபரிசோதைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .