மகள் மீது தாய் புகார்…..வீட்டை விட்டு துரத்த நினைக்கும் மகள்…!!

பிரபல நடிகை சங்கிதா மீது அவரது தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் பிதாமகன், தனம், மன்மதன் அம்பு, உயிர், போன்ற படங்களில் நடித்தவர் சங்கிதா. இவர் தற்போது பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சங்கிதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பிவிட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்ச்சி செய்கிறார், என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Image result for சங்கீதா

இது குறித்து மகளிர் ஆணையம் சங்கீதாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. சங்கீதாவும் மகளிர் ஆணையத்துக்கு சென்று விளக்கம் அளித்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தரை தளத்தில் பானுமதியும், முதல்  தளத்தில் சங்கீதாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டை பானுமதி சங்கீதாவின் சகோதரிக்கு கொடுத்து விடுவார் என்று நினைத்துள்ளார் அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பானுமதி புகார் அளித்துள்ளார்.

Image result for சங்கீதா

இது குறித்து சங்கீதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலில், என்னை இந்த உலகத்துக்கு கொண்டுவந்த தாய்க்கு நன்றி. 13 வயதிலேயே எனது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு அனுப்பினார். வேலைக்கு போகாமல் மதுபோதைக்கு அடிமையான மகன்கள் நலனுக்காக என்னை சுரண்ட ஆரமித்தார். என் கணவருக்கும் தொல்லை கொடுத்து குடும்ப நிம்மதியை கெடுத்தார். இப்போது என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.