BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்திய போது அது சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Image result for கள்ளிப்பால்

இதனிடையே ஆண்டிப்பட்டியில் இருக்கக்கூடிய ராஜதானி காவல்துறை இந்த வழக்க்கை தீவிரமாக விசாரித்தன் அடிப்படையில் பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. தாயும் , மாமியாரும் சேர்ந்து ஆண் வாரிசுக்காக கள்ளிபால் கொடுத்து பெண் குழந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில நாட்களிலும் முன்பு மதுரை உசிலம்பட்டியில் இது போன்ற கொடூரம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.