நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன- மத்திய அரசு தகவல்!

வீடுகளில் தயாரித்த முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன என்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபபட்டவர்களில் 290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *