இயேசுவை விட அதிகம் ”2,244 வயதுடைய ஆலிவ் மரம்” குவியும் சுற்றுலா பயணிகள் …!!

மான்டனிக்ரோ என்ற குட்டி நாட்டில் உள்ள ஆலிவ் மரம் ஒன்று அதிக வயதான மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அந்த மரத்தின் வயது 2, 244 ஆண்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 30 அடி நீளம் , அகலம் பச்சைப்பசேலென்ற காணப்படும் இலைகள்  ஒழுங்கில்லாமல் பின்னிப் பிணைந்து முதல் பார்வையிலேயே இது ஒரு ஆலிவ் மரம் என்று அறிந்து கொள்ளக் கூடிய இந்த மரத்துக்கு என்று தனி சிறப்பு ஒன்று இருக்கிறது .இது இயேசு கிறிஸ்துவை காட்டிலும் வயது மூத்தது என்கிறார்கள் என்று மான்டனிக்ரோ நாட்டின் மக்கள். இதன் வயது 2,244 வயதாகி தற்போதும் உயிருடன் இருக்கின்றது.

Image result for Montenegro's Olive Tree

இந்த மரத்துக்கு இந்த மரத்துக்கு உள்ளூர்க்காரர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் ஸ்டாரா மஸ்லினா. இந்த மரத்தின் வயது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த நாட்டுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.தனியாருக்குச் சொந்தமான இந்த இந்த மரத்தை 2003 ஆம் ஆண்டு முதல் மான்டனிக்ரோ அரசு தனது கட்டுப்பாட்டில் பாதுகாத்து வருகிறது. ஸ்டாரா மஸ்லினா மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய்யை வாங்கி செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவில்  ஆர்வம் காட்டி வருகின்றனர்.