இலங்கையில் குண்டுவெடிப்பு…. 49_க்கும் அதிகமானோர் பலி….. 280 பேர் சிகிச்சை….!!

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 49_க்கும் அதிகமானோர்  உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் தேவாலயத்தில் வெடித்தது.

அதே போல கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம் , நீர்க்கொழும்புவில் இருக்கும் ஒரு இடம்,  நட்சத்திர ஹோட்டல் என அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இது வரை 49 பேர் உயிரிழந்ததாகவும் , 280_க்கும் மேற்பட்டோர் தேசிய கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.