102 பேர் பலி….. 300_க்கும் அதிகமானோர் காயம்….. இலங்கையில் தொடர் பதற்றம்…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர்  பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது  கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.