
புனேவில் உள்ள ஹடப்சர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரிந்து பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரி ரிது பரத்வாஜ் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அவர்களது வீட்டில் சுகாதாரமற்ற சூழலில் 300-க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்த்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரிந்து மற்றும் ரிது வீட்டில் பூனைகளை வதங்க வைத்திருப்பதாகவும், அவை மருந்து செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் சமையலறை மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூனைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் குறிப்பிட்ட சில பூனைகள் கர்ப்பமாகவும் அவற்றின் நிலை மிகவும் மோசமாகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் பூனைகளை அங்கிருந்து மீட்டுச் செல்ல தற்காலிக திட்டங்களை பரிசீலித்தனர். ஆனால் வீட்டு உரிமையாளர்கள், பூனைகளை தாங்களே வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக மாற்றுவதாக உறுதியளித்தனர். இதனால், அவர்களுக்கு சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அதிகாரிகள் மீண்டும் கண்காணிப்பு நடத்த உள்ளதாக கூறினர்.
#ExpressPune | Over 300 cats found in unhygienic conditions at Hadapsar apartment; #Pune authorities direct owners to shift them
(Express Videos)https://t.co/vswSd4wD32 pic.twitter.com/Nkre5hOVmF
— The Indian Express (@IndianExpress) February 17, 2025