மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு…… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து…!!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அன்றைய தினம்  மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . மேலும் மதுரையில் நடைபெறும் வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் .

Image result for தேர்தல் ஆணையம் மதுரை திருவிழா

இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும் தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எண்ணம் இல்லையா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது . இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சித்திரை தேரோட்டத்தில்  சம்மந்தப்பட்ட மதுரை மத்திய தொகுதி உட்பட்ட ஏழு பள்ளிகளில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.