விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 7 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகன் ரோகித்கண்ணா(17). இவர் கடந்த 31ஆம் தேதி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து  ரோகித்கண்ணா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மற்றவர்கள் இந்த உலகில் வாழலாம் என்று கருதிய அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையின் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழுவினர் ரோகித்தின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களும்  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. மேலும் இதயமும், நுரையீரலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. தனி விமானம் மூலம் இதயமும், நுரையீரலும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *