“பாட்டி உங்கள அந்த சார் கூப்டுறாங்க” நகையை அபேஸ் செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை எடுத்து சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மில்லில் வேலை பார்த்து வந்த சிவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பென்ஷன் பணத்தை மாரியம்மாள் வாங்கி வந்தார். இந்நிலையில் மாரியம்மாள் கோவில்பட்டி சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று அங்கு பென்ஷன் பணம் ரூ.2000 பெற்றுக்கொண்டு மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கருவாட்டு பேட்டை அருகில் மாரியம்மாள் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பாட்டி உங்களை அந்த சார் கூப்பிடுகிறார் என்று கூறியுள்ளார்.

அந்த நபர் காட்டிய திசையில் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் உடையணிந்த நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரிடம் மாரியம்மாள் சென்று நீங்கள் யார்? எதற்காக என்னை கூப்பிட்டீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் பாட்டி நீங்க மாஸ்க் அணியவில்லை. மேலும் ஊரில் வழிப்பறி சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் போட்டிருக்கும் நகையை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் என அந்த மர்மநபர் பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாரியம்மாள் தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றியுள்ளார். அந்த நபர் நகையை வாங்கி ஒரு காகிதத்தில் மடித்து வைத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி பாட்டியிடம் கொடுத்துள்ளார்.

அந்த பொட்டலத்தை மாரியம்மாள் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் மாரியம்மாள் வீட்டிற்கு சென்று நகை இருந்த பொட்டலத்தைப் பிரித்து பார்த்த போது அதில் நகை இல்லாமல் சீனி கல் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தார். அதன்பின் பாட்டி உதவுவது போல் நடித்த நபர் ஏமாற்றி நகையை எடுத்து சென்றதை அறிந்தார். இதுகுறித்து மாரியம்மாள் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை எடுத்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *