என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி லட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் லட்சுமி வலித் தாங்கமுடியாமல் அலறியுள்ளார்.

அந்த சத்தம் கேட்டு லட்சுமியின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *